2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

8 கோடி ரூபா செலவில் காத்தான்குயில் 5 வடிகான்கள் நிர்மாணம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

காத்தான்குடி நகர சபை பிரிவில் 8 கோடி 25 இலட்சம் ரூபாய் செலவில்  5 வடிகான்கள் நவீன வசதிகளுடன் மூடியிடப்பட்ட முறையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

உலக வங்கி உதவித் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி சபைகளினூடாக நடைமுறைபடுத்தப்பட்டு வரும் புறநெகும திட்டத்தினூடாக இவ் வடிகான்கள் அமைக்கப்படவுள்ளன.

23 மில்லியன் ரூபாய் செலவில் மீன்படி இலாகா வீதிக்கான வடிகானும் 22 மில்லினயன செலவில் சின்ன தோணா வடிகானும் 14 மில்லியினில் சேர் றாஸீக் பரீட் மாவத்தை வீதிக்கான வடிகானும் 19 மில்லியன் ரூபாய் செலவில் நூறாணியா மையவாடி வீதிக்கான வடிகானும் 40 இலட்சம் செலவில் அல்அமீன் குறுக்கு வீதிக்கான வடிகானும் அமைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .