2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

80 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Freelancer   / 2022 ஜூன் 09 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதன பசளை மூலம் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டிருப்பதாக அகில இலங்கை விவசாய சம்மேளத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.யோகவேல் தெரிவித்தார்.

சேதனப் பசளையை நம்பி செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோக வேளாண்மை நல்ல விளைச்சலைத் தந்துள்ளதாகவும், இரசாயன உரம் கிடைக்கும் பட்சத்தில்,  மேலும் நல்ல அறுவடையை எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை விவாசாய சம்மேளனம், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் அண்மையில் நடாத்திய பேச்சு வார்த்தையின்போது,  இம்மாத இறுதிக்குள் இந்தியாவிலிருந்து இரசாயன பசளையை இறக்குமதி செய்து தருவதாகவும் உறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சேதனப் பசளை மூலம் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அறுவடை செய்யும்போது,  ஒரு ஏக்கருக்கு 10 மூடை அறுவடையை எதிர்பார்த்தால், இரசாயன  பசளை மூலம் செய்கை பண்ணப்படும் நெற்செய்கைக்கு ஒரு ஏக்கருக்கு 35 மூடைகளை அறுவடையாக எதிர்பார்க்க முடியும் என்றார். 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .