2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

9 கிளைமோர் குண்டுகள் மீட்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆய்த்தியமலை பொலிஸ் பிரிவில்  ஒன்பது  கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டதாக ஆய்த்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆய்த்தியமலை பொலிஸ் பிரிவில் மணிபுரம் கிராமத்திலுள்ள ஒருவரின் காணியை 'டோஸர்' கொண்டு சுத்தம் செய்யும்போது அதிசக்தி வாய்ந்த கிளைமோர்க் குண்டுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு குண்டுகளும் பத்து கிலோகிராமுக்கு அதிகமான எடையைக் கொண்டு காணப்பட்டதாகவும் அக்குண்டுகளை இராணுவத்தின் குண்டு செயல் இழக்கும் குழுவினரின் உதவியுடன் அவ்விடத்திலயே செயலிழக்கச் செய்ததாகவும் ஆய்த்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X