Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சவுதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், ஜித்தாவில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாடு (OIC) அமைப்பின் பொருளாதார விவகாரங்களுக்கான பதில் செயலாளரும் பிரதிச் செயலாளருமான அஹமட் செங்கெண்டோவை, ஜித்தாவில் உள்ள OIC தலைமையகத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் தூதுவர் முசா குலக்லிகாய, நிருவாக மற்றும் நிதிப் பிரிவின் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதியின் விசேட தூதுவராக சவுதி அரேபியா சென்றுள்ள அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நடத்திய இந்த சந்திப்பின் போது, சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் முஹமட் அம்சா மற்றும் கொன்சியுலர் ஜெனரல் எஸ்.எம். ஏ பலாஹ் மௌலானாவும் உடனிருந்தார்.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago