2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அங்காடி வியாபாரத்துக்குத் தடை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள பிரதான வீதியில், வீதிப் போக்குவரத்துக்குத் தடையாக வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அங்காடி வியாபாரிகள் இன்று (02) அங்கிருந்து எழுப்பப்பட்டதுடன், அப்பிரதேசத்தில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி தபால் நிலையம் மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலை முன்னால்  அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமையால், வீதி விபத்துகள் ஏற்படுவதாகவும், வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களை அம்பியுலன்ஸில் ஏற்றிச் செல்வது, நோயாளர்களின் போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதனாலும் இவ்விடங்களில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு பிரதேச சபையால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X