Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம். நூர்தீன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி அஜந்தன் என்றழைக்கப்படும் சி.ராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகள், அஜந்தனை விடுதலை செய்யக்கோரி, உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு - வவுணதீவில், இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - காந்தி பூங்காவில், தனது நான்கு பிள்ளைகளுடன், அஜந்தனின் மனைவி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (17) ஆரம்பித்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தை அடுத்து கைதுசெய்யப்பட்ட தனது கணவன், 18 தினங்களைக் கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் இந்நிலையில், தனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக் கவேண்டுமென வலியுறுத்தியுமே, உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago