Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டுமென்று வலியுறுத்தி ஆயிரம் அஞ்சல் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில்; இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
டிசெம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவுக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு, நகரின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது.
அஞ்சல் அட்டைகளில் கையெழுத்துப் பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பிவைக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையச் செயலாளர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் நல்லாட்சி நிலவும் இந்த வேளையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது. இதை நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இந்த அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

1 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago