2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, மாவடிவேம்புப் பிரதேசத்திலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பல்தேவை தொழில்வழிக் கட்டடத்தொகுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் இன்று வியாழக்கிழமை நாட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய நேரடி உதவித் திட்டத்தின் நிதி உதவியுடன் 64 இலட்சம்  ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் இந்த கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 50க்கும்  மேற்பட்டோர் தொழிற்பயிற்சி பெறுவதற்குத் தோதாக இந்த தொழிற்பயிற்சி நிலையம் அமையும் என உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி.ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X