Niroshini / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது என்றால், அவற்றை உரிய ஆதாரங்களுடன் எனக்கு அறியத்தந்தால் அதனை நான் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டடிப்புத் தெகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசாமாணிக்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஓத்றீ விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களைவிட தற்போது அபிவிருத்திகள் குறைவாகத்தான் நடைபெறுகின்றன. கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை முடித்த பின்னர் மீண்டும் நிதியுதவிகள் கிடைத்த பின்னர்தான் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தலாம் என தற்போதைய அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெறும் என்பதை நான் தெரிவிக்கின்றேன்.
பொங்கு தமிழுக்கு மக்கள் வந்தது போல் எழுக தமிழுக்கும் வட மாகாண மக்கள் வந்துள்ளார்கள். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களை அங்கு வந்திருந்த மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அங்கு வந்திருந்த மக்கள் அவர் தெரிவித்த கருத்துக்களை எற்றுக் கொள்ள வில்லை என்றால் அவ்விடத்திலிருந்து உடன் கலைந்திருக்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண முதலமைச்சரைப் பெறுத்தவரையில் அது மக்களுடைய கருத்தாகத்தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025