Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரையம்பதி மாவிளங்குதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு நிரந்தர அதிபரையும் ஆங்கில ஆசிரியரையும் நியமிக்குமாறு வலியுறுத்தியும் அவ்வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்யுமாறு கோரியும் அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையுள்ள இந்த வித்தியாலயத்தில் 2015.01.08ஆம் திகதி முதல் அதிபர் இல்லையென்பதுடன், இந்த வித்தியாலயத்தில் கடமையாற்றிவந்த ஆங்கில ஆசிரியர் வித்தியாலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவ்வித்தியாலயத்தில் அதிபர் மற்றும் ஆங்கில ஆசிரியருக்கான வெற்றிடங்கள்; கடந்த ஒரு வருடமாக காணப்படுகின்றன.
மேலும், தரம் ஒன்பது வரையான வகுப்புகள் மாத்திரமே இந்த வித்தியாலயத்தில் உள்ளன. ஒன்பதாம் தரத்துக்குப் பின்னர் ஏனைய பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால், சில மாணவர்கள் ஒன்பதாம் தரத்துடன் பாடசாலைக்குச் செல்லாமல் விடுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
எனவே, இந்த வித்தியாலயத்தில் நிலவுகின்ற குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு உரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முன்வர வேண்டுமெனவும் இவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்; கலந்துரையாடினார். எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இவ்வித்தியாலயத்தில் காணப்படுகின்ற இரண்டு வெற்றிடங்களும் நிரப்பப்படுமெனவும் இதன்போது அவர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago