2025 மே 02, வெள்ளிக்கிழமை

அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு நவீன கட்டில்கள்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிலையில், அதற்கு ஆதரவளிக்கும் வகையில், பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுகின்றன.

இதன் கீழ், பொதுசேவைகள் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் மூலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான நவீன கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய புத்தட்டுவே ஆனந்த தேரரிடம் பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் நாகலிங்கம் சசிகரன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்தக் கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டில்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி கே.கலாரஞ்சினியிடம் இன்று (22) வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X