2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’அநாவசியத் தலையீட்டை ஒழிப்போம்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 11 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான், க-சரவணன்

'மட்டக்களப்பு மாவட்ட அரச ஊழியர்களின் சுயாதீன சேவை மீதான வெளியாரின் அநாவசியத் தலையீட்டை ஒழிப்போம்' என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டச் செயலகம் உட்பட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்ட அரசாங்க உத்தியோகத்தர்கள், பேரணியாக காந்தி பூங்காவைச் சென்றடைந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது. அவர்களை அவமானப்படுத்தக்கூடாது. அரசாங்க உத்தியோகத்தர்களில் சுயாதீனமான செயற்பாட்டில் தலையிடக்கூடாது ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் உத்தியோகபூர்வமற்ற வலையமைப்புகளின்; மூலம் வெளியிடப்படும் போலியான, ஆதாரமற்ற தகவல்களை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஊழல் மோசடிகளில் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபட்டதாகக் கருதினால், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தம்மிடமுள்ள ஆதாரங்களைச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கையை எந்தவொரு பிரஜையும் எடுக்க முடியும்.

அதை விடுத்து, அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது பொய்யான தகவல்களை வழங்குவதுடன்,  ஒரு சில குழுக்களை பகடைக்காய்;களாக்கி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதில் மக்களுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை. எனவே, உண்மையைப் புரிந்துகொண்டு  செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X