2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

பேரின்பராஜா சபேஷ் -

மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்று க்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாத்துரை பத்மநாபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலாளியான குறித்த நபர் சனிக்கிழமை (02) தொழிலுக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் கல்லடி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .