2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அனர்த்த முன்னாயத்த கூட்டம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கீழ் பருவ பெயர்ச்சி காலத்தில் ஏற்படும் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில், பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களில் பிரதேச மட்டத்திலான வட கீழ் பருவ பெயர்ச்சி காலத்தை எதிர்கொள்ளத் தயாராவதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் முன்னாயத்தம் தொடர்பிலான கலந்துரையாடல், செயலகக் கேட்போர் கூடத்தில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜீத் தலைமையில் நேற்று (15) மாலை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .