Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
வட, கிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில், அனர்த்த முன்னாயத்த நிலைமைபற்றி ஆராயும் உயர்மட்டக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ஹெட்டியாராச்சி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாட் உட்பட இராணுவப் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
டெங்கு உட்பட தொற்றும் நோய்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன. அனர்த்த முன்னாயத்த வேலைத் திட்டங்கள் இது தொடர்பில் மக்களை விழிப்பூட்டல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டன.
15 minute ago
30 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
59 minute ago
1 hours ago