2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’அனர்த்தத் தணிப்பை அடிப்படையாகக்கொண்டு ’அபிவிருத்தித் திட்டங்கள்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 11 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

அனர்த்தத் தணிப்பு என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்சார்ள்ஸ் தெரிவித்தார்.  

இதன் காரணமாகவே, இம்மாவட்டத்தில் அனர்த்தங்கள் மூலமான  பாதிப்புகளைக் குறைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

'அனர்த்தம் தொடர்பாக மீட்சித்திறனை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பில்  இரண்டு நாள் பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு, நாவலடி நியூ சண் ரைஸ் ஹோட்டலில் திங்கட்கிழமை (10) மாலை  நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் ஒக்ஸ்பாம் நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலிய உதவி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தும் இப்பயிற்சிநெறியில்; மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 40 பேர் பங்குபற்றியுள்ளனர்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'வெள்ளம், வரட்சி, சூறாவளி உள்ளிட்ட அனைத்து வகையான அனர்த்தங்களுக்கும்  உட்படும் ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது. இதன் காரணமாக இங்கு  அனர்த்தங்களைத் தடுக்கும் வழி வகைகளை வலுப்படுத்தி, இதற்கான வேலைத் திட்டங்களைச் செய்துள்ளோம்' என்றார்.  

'அனர்த்தத் தணிப்பு, பாதுகாப்பு வேலைகளை முக்கியமாகக் கொண்டுள்ளோம். இதன் காரணமாக கடந்த வருடத்தில் வெள்ளப்பெருக்கால், எமது மாவட்டம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. இந்த வருடத்தில் வரட்சி நிலவினாலும், எமது மாவட்டத்தில் 80 சதவீத பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது' என்றார்.  

'அனர்த்தத் தணிப்பை அடிப்படையாகக் கொண்ட அனர்த்த முகாமைத்துவத்தை  பேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். இதற்குரிய முதலீடுகளைச் செய்துள்ளோம். அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் எமக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளன' என்றார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X