Freelancer / 2021 ஜூன் 15 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பில் இருந்து அனுமதியின்றி ஆழ்கடலில் இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 8 பேரை, நேற்று (14) இரவு கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளதுடன், மீட்கப்பட்ட 3 இயந்திரப் படகுகளையும் கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினர் வழமைபோல கடலில் சம்பவதினமான நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு, கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமாக கடலில் இயந்திரப்படகுகள் பிரயாணித்ததை அவதானித்த கடற்படையினர் பின் தொடர்ந்து இயந்திரபடகுகளை வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன்போது அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற, மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்களையும், கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை கைது செய்ததுடன், அவர்களின் 3 இயந்திரப்படகுகளையும் கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டுவந்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக, மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
M
23 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago