2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அன்னை பூபதியின் நினைவு தினத்தை சமாதியில் நடத்த தடை

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா

அன்னை பூபதியின் 32ஆவது நினைவு தினம், நேற்று (19) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், நினைவேந்தல் நிகழ்வை, மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது சமாதியில் நடத்துவதற்கு பொலிஸார் தடைவிதித்தனர்.
எனினும் அவரது மகளது வீட்டில் நினைவுதினம், நேற்று (19) அனுஷ்டிக்கப்பட்டது.

அன்னை பூபதி, 1988ஆம் ஆண்டு, இந்திய அமைதிகாக்கும் படையினைரை வெளியேறுமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பு மாமாங்கம் கோவில் முன்றலில், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை, மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர்நீத்தார்

இந்நிலையில் அவரது நினைவேந்தலை, அவரது சமாதியில் நினைவு கூருவதற்கு அவரது மகள், பொலிஸாரிடம் அனுமதி கோரிய நிலையில், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டும், சமாதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

எனினும் நேற்று (19) காலை, மாமாங்கத்திலுள்ள அன்னை பூபதியின் மகளது வீட்டுக்குச் சென்ற பொலிஸார், நாட்டின் சூழ்நிலை காரணமாக, வழங்கிய அனுமதியை இரத்துசெய்தனர்.

இதன் காரணமாக, அன்னை பூபதியின் நினைவேந்தலை செய்யமுடியாமல் போயுள்ளதாகவும், இன்று (20) காலை குறித்த சமாதியில் நினைவேந்தல் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையிலான அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், அன்னை பூபதியின் சமாதியில், இன்று(19) ஈகைச்சுடர் ஏற்றி, மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக செயலாளர் இருதயம் செல்வகுமாரும் கலந்துகொண்டார்.

 

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X