2025 மே 09, வெள்ளிக்கிழமை

அப்பியாசக்கொப்பிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 04 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஒருதொகுதி பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தொழில் துறைத்திணைக்கள வளாகத்தில் இயங்கும் இக் கூட்டுறவுச் சங்கமானது, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பெண்களை அங்கத்தவர்களாகக் கொண்டதாகும்.
இவர்கள் அரசாங்க அதிபரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களது 21 குடும்பங்களைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகள்  சங்கத்தின் தலைவி மற்றும் பொருளாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களான பெண்கள் தைய்யல், கைவேலைப்பாடுகள், சிற்றுண்டிகள் தயாரித்தல், காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X