2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்திக்கான விசேட சட்டமூலம் நிராகரிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 09 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அபிவிருத்திக்கான விசேட சட்டமூலம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்து இன்று (09) அழைத்து வரப்பட்ட அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,  'கடந்த மாதம் 11ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் விசேட கூட்டம் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்திக்கான விசேட சட்டமூலம் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் அதனை நிராகரிக்கவில்லை என்று கூறியுள்ளார்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X