2025 மே 10, சனிக்கிழமை

அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலக மண்டபத்தில், இன்று (26)  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டில் 8,312.73 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 8,086 செயற்றிட்டங்களின்  முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றிய மீளாய்வு, முன்னேற்றம், பணிகளை முன்னெடுப்பதில் உள்ள சவால்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள்,  பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X