Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்புக்கள் வெளியாவதற்கு முன்னர், அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் , வேலைத் திட்டங்கள் சில மந்தகதியில்செயல்முறை வடிவம் பெறுவதைப் பார்க்க முடிகிறதெனவும் தெரிவித்த வடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் நஸீர் அஹமட், இவ்வாண்டுக்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிக்குரிய பணிகளில் இன்னும் பல வேலைத் திட்டங்கள் தொடங்கப்படாமலே உள்ளனதெனவும் , இதனை உடனே மாற்றி அமைக்கவேண்டும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இதுவிடயமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் நஸீர் அஹமட் வேண்டுகோளை முன் வைத்தார்.
நிகழ்வில் பிரதேச இணைத் தலைவர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு மேலும் கூறுகையில், தற்போது வருடத்தின் அரையாண்டைத் தாண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். சகல பணிகளும் துரிதமாக முன்னெடுக்கப்படவேண்டும். எவ்வாறேனும், வழமையான வருடங்களை விட இவ்வாண்டின் இறுதிப் பகுதி ஏதோவொரு அல்லது பல தேர்தலுக்குரிய காலமாக அறிவிக்கப்படலாம்.அவ்வாறு அறிவிக்கப்பட்டால் இவ்வாண்டுக்காக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளில் கவனம் செலுத்தாது தேர்தல் நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனஞ் செலுத்த நேரிடும். அதனால், அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளைப் பயன்படுத்த முடியாமல் போகக் கூடும்எனத்தெரிவித்த , ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் நஸீர் அஹமட், அதன் விளைவாக பிரதேசத்தின் அபிவிருத்திகள் முடங்க வாய்ப்புண்டு.இவ்வாண்டில் பயன்படுத்தப்படாத நிதியை அடுத்து வரும் ஆண்டில், அடுத்து வரும் அரசாங்கத்திடம் கோரினால் அது கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, இதுவிடயத்தில் அடிமட்ட உத்தியோகத்தர் தொடக்கம் உயர்மட்ட அதிகாரிகள் வரை இவ்வாண்டு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இவ்வாண்டில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான வேலைத் திட்டங்களை உடனடியாக அமுலாக்கம் செய்வதில் கவனஞ் செலுத்த வேண்டும்.பிரதேச செயலகங்களில் மாதாந்தம் நடைபெறும் அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டங்களில் அதிகாரிகள் அரச கூட்டுத்தாபன, திணைக்களத் தலைவர்கள், பிரதேச அரசியல்வாதிகள் முன்னிலையில் எடுக்கப்படும் என்றார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago