2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அம்பிளாந்துறையில் நினைவேந்தல்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழரசுக்கட்சி ஏற்பாடு செய்த கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நினைவு தினம் நேற்று சனிக்கிழமை மாலை அம்பிளாந்துறை முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய முன்றிலில் நடைபெற்றது.

அம்பிளாந்துறை  பட்டிப்பளை பிரதேச தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் இ.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக 25ஆவது ஆண்டினை குறிக்கும் வகையில் 25 ஈகச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக படுகொலை சம்பவம் தொடர்பிலான நினைவுப் பகிர்வும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X