Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன், பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
நத்தார் தின ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 10ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றது.
இந்நிகழ்வு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி. சேயோன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பொன். செல்வராசா ஆகியோர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், எஸ். வியாளேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் நினைவுச் சுடர் ஏற்றினர்.
காலத்தை வென்று வாழும் தமிழினக் காவலன் எனும் நினைவு நூல் வெளியிடப்பட்டதோடு யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் நினைவுப் பேருரை ஆற்றினார்.
அம்பாறை மறை மாவட்ட ஆயர் வணபிதா ஜோசப் பொன்னையா, காயத்திரி பீட பிரதம குரு சிவயோகச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார், பேராசிரியர் எஸ்.பத்மநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago