வா.கிருஸ்ணா / 2018 மார்ச் 19 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற சபைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
ஏப்ரல் 4ஆம் திகதி, மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேசசபையும் 5ஆம் திகதி, போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைகளும் 6ஆம் திகதி, மண்முனை மேற்கு பிரதேசசபை மற்றும் மண்முனைப்பற்று பிரதேசசபையும் ஒன்றுகூடவுள்ளன.
அத்துடன், 9ஆம் திகதி, மட்டக்களப்பு மாநகரசபையும் ஏறாவூர் நகரசபையும் 10ஆம் திகதி ஏறாவூர்பற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபையும், 11ஆம் திகதி கோறளைப்பற்று மத்தியும் வாகரை பிரதேசசபையும் ஆட்சியமைக்கவுள்ளதாகவும் கருணாகரம் தெரிவித்தார்.
40 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago