2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அமர்வுக்குத் தடைசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 30 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களில் நால்வருக்கு, மீண்டும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென, அக்கட்சியினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் சபை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, அச்சபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு அச்சபையின் அடுத்து வரும் ஒரு மாத கால அமர்வுகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கும் தீர்மானமொன்று, கடந்த 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது.

மாநகர சபையில் நடைபெற்ற ஆறாவது அமர்வில் மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை (31) நடைபெறவுள்ள 7ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்கான கடிதங்கள், தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளனவென, மேற்படி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் செல்வி மனோகர் ஊடகத்துக்குத் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவே, இவர்களுக்கான தடை விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தடைவிதிக்கப்பட்டிருந்த ஐவரில், செல்வி மனோகர் தவிர ஏனைய நால்வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X