2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அமைச்சர் பந்துல, மட்டக்களப்புக்கு விஜயம்

Freelancer   / 2021 ஜூன் 16 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

.சக்தி

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு, இன்று (16) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி, கள்ளியன்காடு உணவுக் களஞ்சியசாலையில் அமையவுள்ள "ரஜவாச"  பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக அமைச்சரால் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன்  அவர் கலந்துரையாடினார்.

இந்தக் கள விஜயத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், வர்த்தக அமைச்சின் உணவு ஆணையாளர் ஜே.கிறிஸ்ணமூர்த்தி, சதொச நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பீரீஸ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அ.நவேஸ்வரன் மற்றும் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X