Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல சமூகங்களும் ஒன்று சேரும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, இலாபகரமான பொதுச் சந்தை எனப் பெயர் பெற்ற ஏறாவூர் பொதுச் சந்தை நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்தித் தருமாறு கோரி, அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் நேரடியாகச் செல்லத் தீர்மானம் எடுத்திருப்பதாக ஏறாவூர் நகர முதல்வர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏறாவூர் நகர சபையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற ஏறாவூர் நகர வர்த்தகர்களுடனான சந்திப்பில், அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நகர மேயர், கடந்த சபை அமர்விலே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, எதுவித கட்சி இன, மத பேதங்களின்றி ஏறாவூர் நகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் நகரத் திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் ஏறாவூர் நகர பொதுச் சந்தை நிர்மாணத்தைத் துரிதப்டுத்துமாறு கோரி நேரடியாகச் சென்று வேண்டுகோளை முன்வைப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஏனென்றால், கடந்த கால யுத்தத்தாலும், இயற்கை செயற்கை அழிவுகளாலும் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏறாவூர் நகர வர்த்தகர்கள் குறிப்பாக சந்தை வியாபாரிகள் அத்தனை கஷ்டங்களையும் தாங்கிப் பிடித்து தமது வியாபார நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்தார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனாலும், பன்னெடுங்காலமாக எதுவித போதிய வசதி வாய்ப்புக்களுமில்லாது பல குறைபாடுகளுடன் பொதுச் சந்தையாக இயங்கிய நிலையில் அதனை நவீன சந்தையாக நிர்மாணிக்கும் திட்டம், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் அயராத முயிற்சியால் தொடங்கப்பட்டு வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுவந்தன.
ஆயினும், நிர்மாணப் பணிகள் தொடங்கி சுமார் ஒரு வருட காலம் நிறைவுற்றுள்ள தற்போதைய நிலையிலும் பொதுச் சந்தை நிர்மாணப் பணிகள் மந்தகதியை அடைந்துள்ளன.
இதனால், ஏறாவூர் நகர பொதுச் சந்தை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே, இந்த விடயத்தை அமைச்சர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago