Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
கனகராசா சரவணன் / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தனக்கு எதிராக எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று(23) புதன்கிழமை பொலிசாரின் உருவப் பொம்மையை விகாரை பகுதியில்வைத்து எரித்து எதிர்ப்பை தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு
கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் கானஸ்டபிள் ஒருவர் மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது அவருக்கும், தேரருக்கும் இடையில் ஏற்பட்ட
வாக்குவாத்தினையடுத்து தோர் மங்களகம பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு
செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பொலிசாரை கைது செய்து சட்டவைத்திய பரிசோதனையில் இவர் மதுபோதையில் இருந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு தற்போது கடமையில்
ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தேரர் தன்னை அடித்ததாக தேரருக்கு எதிராக குறித்த பொலிஸ்
கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேவேளை வேறு ஒரு
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தேரர் தன்னை அடித்ததாகவும் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது இது தொடர்பாக பொலிசார் வாக்கு மூலம் எதுவும் பெறவில்லை இதேவேளை அப்பாவி மக்களுக்காக குரல் கொடுத்ததினால் தனக்கு உயிர் அச்சுறத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தேரர்,பொலிஸார் மீது எவ்விதமான நம்மிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago