2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அம்பியூலன்ஸ் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, வா.கிருஸ்ணா

மட்டக்கப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் மீது காத்தான்குடியில் வைத்து கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துவிட்டு, திரும்பிய அம்பியூலன்ஸ் மீதே நேற்று முன்தினம் (17) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அம்பியூலன்ஸின் ஒரு பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரும் மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்தடவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.புவநேந்திரநாதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X