2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அருணேசபுரத்துக்கு பவுசர் மூலம் குடிநீர் வழங்கல்

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பபு மாவட்டத்தில் வரட்சி காரணமாக கிராமப் புறங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு ஒன்று விட்டு ஒரு நாளைக்கு ஒரு கொள்கலன் குடிநீர் வழங்கப்படுவது போதுமானதாக இல்லை எனவும் இதை ஒவ்வொரு நாளும் வழங்கவேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்ததற்கிணங்க,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, வாகரை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை பணித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக  மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடுக்காமுனை, அருணேசபுரம் பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று திங்கட்கிழமை பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.

வழங்கப்படும் குடிநீர் ஆரையம்பதிப்பிரதேசத்தில் உள்ள கிணற்றிலிருந்து பெறப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, செங்கலடி, கிரான் மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 15,000 குடும்பங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எஸ். இன்பராஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X