2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அரச அதிகாரிகளுக்கு எதிராக போலி பேஸ்புக்; ஐவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஆா்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவரும் நிவாரணம் தொடர்பாக அரச அதிகாரிகளை போலி பேஸ்புக் கணக்கு மூலமாக விமர்சனங்களை செய்து வந்த 5 பேரை, நேற்று முன்தினம் (16) மாலை கைது செய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் 

குறித்த பிரதேச செயலகத்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான உலர் உணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் போலி பேஸ்புக் கணக்கில் செயற்பட்டு வந்த சந்தேகநபர்களால் அரசாங்க சேவையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக தரக்குறைவாக விமர்சனம் செய்து, அவர்கள் அவர்களது கடைமையை செய்ய விடாது பங்கம் விளைவித்து வந்துள்ளனர்.

இதனடிப்படையில், குறித்த போலி பேஸ்புக்களுக்கு எதிராக பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காத்தான்குடியைச் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்களை, நேற்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை மே மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X