Princiya Dixci / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களைக் கொண்ட 3 மாத கால இரண்டாம் மொழியான சிங்கள பயிற்சி வகுப்பு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில், இன்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற மத்திய தர (மட்டம் - 2) உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர்.
இதன்மூலம் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன், தங்களது வேலைகளையும் இலகுபடுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.
தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் சிங்கள மொழி முலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago