2025 மே 09, வெள்ளிக்கிழமை

அரச உத்தியோகத்தர்களுக்கு உளநல ஆற்றுகைப் பயிற்சி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற  உத்தியோகத்தர்களுக்கு உள நல ஆற்றுகைப் பயிற்சி நெறி வழங்கப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சி நெறிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில், மட்டக்களப்பு - டேர்பா மண்டபத்தில் நேற்று முன்தினம் (07)  நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

யுத்தத்தாலும் இயற்கை இடர்களாலும் பாதிக்கப்பட்டுப் போயுள்ள மக்களின் இயலளவைக் கட்டியெழுப்பும் வகையிலும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் அரச பணியாளர்களுக்கு உளநல ஆற்றுகைப் பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X