2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரசாங்க அதிபரை இடமாற்றக் கூடாது

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி இணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(28)பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனப்பியள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இடமாற்றம் செய்யக்கோரி சிலர் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றேன்.
 
இன்று அரசியல் ரீதியாக அதிகாரங்களை இழந்த சிலர் தாங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது போனதால் அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டுவரும் சிறந்த நிருவாக கட்டமைப்பை சீர்குழைத்து தற்போது ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு விமர்சனத்தினை ஏற்படுத்துவதற்காகவே இந்த இடமாற்றத்தை செய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்
 
ஆகவே, இவரது இடமாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்டு வரும் சிறந்த நிருவாக கட்டமைப்பையும் மிக அர்ப்பணிப்போடு உருவாக்கப்பட்ட இன ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் என்பதுடன் நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தாமதத்தையும் ஏற்படுத்தும்
 
எனவே,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டாமென கேட்டுக் கொள்வதுடன் ஒரு சிறந்த நிருவாகக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X