2025 மே 09, வெள்ளிக்கிழமை

அரசியலுக்கும் சமூக சேவைக்கும் முன்பள்ளி ஆசிரியர்களே பொறுத்தமானவர்கள்

Sudharshini   / 2015 டிசெம்பர் 22 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

தூய்மையான அரசியலுக்கும் சமூக சேவைக்கும் பெண்கள் பிரதிநிதியாக முன்பள்ளி ஆசிரியர்களே பொறுத்தமானவர்கள், அவர்கள் இந்த சின்னஞ்சிறிய பிள்ளைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மிகுந்த பிரயத்தனம் எடுக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடிப் பிதேதேசத்துக்குட்பட்ட கிட்சி கின்டர் கார்டன் முன்பள்ளியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா, ஒட்டி திங்கட் கிழமை (21) நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

முன்பள்ளி ஆசிரியைகள் பொறுமையாக செயற்பட்டால் மட்டுமே இந்த மாணவர்கள் தமக்கான அடைவு மட்டத்தை அடைய முடியும். உண்மையில் அவர்களின் பொறுமையும் விட்டுக்கொடுப்பும் சமூக சேவை எண்ணமும் என்னை மிகவும் கவர்ந்த விடயமாகும்.

எனவே, தற்போதைய அரசியலில் பெண்களுக்கான ஒதுக்கீடு 25 சதவீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்பள்ளி ஆசிரியைகள் எதிர்வரும் பிரதேச சபை தேர்தலுக்கு தகுதியானவர்கள் என நான் கருதுகிறேன்.

அவர்கள் சமூகத்திலுள்ள எல்லாத் தரப்பினரையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் மிக நெருக்கமான இடைத்தொடர்பை கொண்டுள்ளார்கள். எனவே, தான் பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட இந்த பிரதேச சபை தேர்தலுக்கு, முன்பள்ளி ஆசிரியைகள் பொறுத்தமானவர்கள் என்பது எனது கருத்தாகும்.

எல்லாவிதமான அபிவிருத்திற்கும் அரசியல் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. ஆனால், நமது பிரதேசத்திலுள்ள மக்கள் யாரை, எதற்காய் அரசியலில் தெரிவு செய்ய வேண்டும் என்ற அரசியல் ஞானத்தை இழந்தே காணப்படுகிறார்கள்.

இந்த பொறுப்பற்ற செயற்பாட்டினால்  நமது பிரதேசத்திற்கான பிரதிநிதித்துவம் இன்று தப்பிப்பிழைத்துள்ளது. மீண்டும் எதிர்காலத்தில் இவ்வாறான பிற்போக்கான செயல்பாட்டில் இருந்து விடுபட வேண்டும்.

கடந்த காலங்களில் நமது பிரதிநிதித்துவத்தை தோற்கடிக்க பல சதி முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், இறைவன் அதனை காப்பாற்றித்தந்தான். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விடயம் சூடுபிடித்துள்ளது.

அந்த தேசியப்பட்டியலை கல்குடாவுக்கு பெற வேண்டுமெனில் அதற்கான பிள்ளையார் சுழியை நான் போட்டுத்தருகிறேன். அதனை எவ்வாறு பெறவேண்டும் என்ற ஆலோசனையை வழங்க தயாராகவே உள்ளேன் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X