Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 11 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
இப்போது வரும் அதிக முறைப்பாடுகள் பாடசாலைகளின் சில அதிபர், ஆசிரியர்களைப் பற்றியதாகவே வந்துகொண்டிருக்கிறன. அதிபர், ஆசிரியர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்கின்றனர். அவர்களின் செயலால் மாணவர்களின் கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை நிறுத்த வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நாஸீர் அஹமட், இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டக் களப்பயணத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், இன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மத்திய வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களைச் சந்திக்கும் கூட்டமொன்று ஏறாவூர் அலிகார் மாகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்திய கல்விப் பணிப்பாளர் சேகு அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தரமில்லாத சிலர் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிபர் அந்தஸ்துள்ள அதிபர்கள் இன்றும் ஆசிரியர்களாகவே கடமையாற்றுகின்றனர். இம்முறையினை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் மக்கள் புகார் சொல்லுமளவுக்கு இன்றைய கல்வி நடவடிக்கைகள் சென்று கொண்டிருப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்படியான நிலமைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் நான் பேசவிருக்கிறேன். குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குரிய பாடசாலைகளின் நிலைமைகளை உடனடியாக மாற்றியமைக்க மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஷாமிடம் கட்டாயம் உத்தரவாகத் தெரிவிக்கிறேன்.
அரசியல்வாதிகளுக்கு பின்னால் பாடசாலை அதிபர்கள் செல்வதன் காரணம் ஏன் என்பது எனக்குப்புரியவில்லை, சரியான அதிபராக தனது கடமைகளைச் செய்கின்றபோது அந்த அதிபர் எந்த அரசியல்வாதிக்கும் அச்சமில்லாத ஒருவராக இருக்க முடியும். தலைநிமிர்ந்து பேசும் திறன்கொண்டவராகவும் இருக்க முடியும்.
எனவே, அதிபர் பதவி நிலையில் இல்லாது அதிபர்களாக கடமைபுரியும் அனைவரின் இடத்துக்கும் உரிய தகமையுடையவர்கள் அதிபர்களாக நியமிக்கப்படவேண்டும்.
மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கி கல்வி வழர்ச்சியை மேம்படுத்த அனைத்து அதிகாரிகளும் முன்வர வேண்டும். அதிபர், ஆசிரியர்கள் அதற்காக தங்களை அற்பணித்து கல்விச் சேவையைத் திறன்படச்செய்ய வேண்டும்.
கடமைகளைச் சரியாகச் செய்கின்றபோது இடையூறாக ஏற்படும் தடங்களை உடனடியாக உடைத்தெறிய நான் ஒருபோதும் பின் நிற்க மாட்டேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago