2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

Mayu   / 2024 ஜனவரி 17 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பண்ணையாளர்களின் கால்நடைகள் சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, பெரிய மாதவணை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில் வருகை தந்த குழுவினரினால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்  பொலிஸ் உயர் அதிகாரிகள், மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .