2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அரசை தூக்கி எறிந்து விட்டு செயற்படமுடியாது

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

  கடந்த காலத்தில், கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், கொலை, கொள்ளை என்பன தாராளமாக   அரங்கேற்றப்பட்டன. இவைகளை, செய்தவர்களை  மக்கள் தோற்கடித்தார்கள். தோற்கடித்தவர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக தற்போதுள்ள அரசாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு எங்களால் செயற்பட முடியாதென தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ,   இந்த ஆட்சியில் தான்   பயம், பீதியுடன் இருந்தனர். அந்த நிலை மீண்டுமொருமுறை ஏற்படுவதற்கு நாங்கள் ஒருபோதும்  இடமளிக்க மாட்டடோமென கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், கடந்த காலத்தில் கபடத்தனமாக நாடகமாடியவர்கள் மீண்டும்  ஆட்சியாளர்களாக இருப்பதற்கு தகுதியுள்ளவர்களா என சிந்தித்தே மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்தது என்றும் அவர் கூறினார்.

 மட்டக்களப்பபு ஏறாவூர் நான்காம் குறிச்சி பத்திரகாளி ஆலயத்தில் மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

 அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக செயற்படுகிறார். ஒரு வகையில் நல்ல விடயமாக இருந்தாலும் தவறுகள் நடைபெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

 போதைவஸ்து கடத்துவோருக்கும்     வியாபாரம் செய்பவர்களுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பக்கம் சரியென பார்க்கின்ற போதிலும், பழிவாங்குவதற்காக இதனைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

 போதைப் பொருள்களுடன் தொடர்புடையவர்களினால் மேற்கொள்ளப்படும் கொலை, கொள்ளை மற்றவர்களை வஞ்சிக்கும் செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது மரண தண்டனை நிறைவேற்றுவது சரி தென்பட்டாலும், ஆழமாகச் சிந்திக்கின்ற போது அப்பாவிகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதெனவும், மரண தண்டனை என்பது நாகரீகமான உலகில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் காணப் படுகிற தென்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X