2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அரபுக் கல்லூரிகளுக்கு விடுமுறை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .