2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அரவம் தீண்டியதில் அப்பா மரணம்

Editorial   / 2025 ஜூலை 01 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல். ஜவ்பர்கான் மட்டக்களப்புகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய யோகராசா தில்லைவாசகம் பரிதாபகரமான முறையில் பலியானதாக தெரிய வருகிறது இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக பிற்பகல் 1.30 மணியளவில் நடந்து வந்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கிற்றனர். குறித்த திருநீற்றுக்கேணியில் நீண்ட காலமாக பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர் அதேநேரம் முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்‌‌‌றது. சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .