Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
உலக நீரழிவு தினத் 'நாளைய மாற்றத்துக்கு இன்றே செயல்படுவோம'; எனும் தொனிப்பொருளில் தாதியர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு இன்று சனிக்கிழமை (14) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை நீரழிவு சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரழிவு அறிவூட்டல் நிலையத்துடன் இணைந்து நடாத்திய இந்நிகழ்வு நிலையத்தின் தலைவர் நீரளிவு மற்றும் அகஞ்சுரப்பு நோய் நிபுணர் வைத்தியக் கலாநிதி தர்ஷினி கருப்பையாபிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
நீரழிவைக் கட்டப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம் எனும் விழிப்புணர்வுக் கைநூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. நவரட்ணராஜா, வைத்தியக் கலாநிதிகளான ரி. அருள்மொழி, ஆர். ரமேஸ்இ தாதியர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோர் நீரழிவு நோயின் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago