Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம்,அறிவிப்புத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அறிவிப்புத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான அறிவிப்பாளர் பயிற்சி செயலமர்வு ஒன்றை மட்டக்களப்பில் நடத்தவுள்ளது.
இதற்கிணங்க,சனிக்கிழமை(19) காலை 9 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி, நொச்சிமுனையில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஏ. ஆர். எம் ஜிப்றி இச் செயலமர்வில் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளார்.
இச்செயலமர்வில் பங்குபற்ற விரும்புபவர்கள் 065-2222832 அல்லது 075-8265824 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
முற்பதிவு செய்தவர்கள் மாத்திரமே செயலமர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
இதேவேளை, அடுத்த வருட ஜனவரி மாத முற்பகுதியில் அறிவிப்பாளர் பயிற்சிக்கென புதிய டிப்ளோமா வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆர்வமுள்ளவர்களை இம்மாத இறுதிக்குள் பதிவுசெய்து கொள்ளுமாறும் வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளர் ப்ரியா சிவமோகன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago