2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

வா.கிருஸ்ணா   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலின் கீழ், நாடெங்கிலும் 50 அறநெறிப் பாடசாலைகளை அமைக்கும் பணிகள், இன்று (04) ஆரம்பிக்கப்பட்டன.

“ஆன்மீகத்தோடு இணைந்த அபிவிருத்தி; மாணவர்களுக்கு நிழல்கொடுக்கும் அறநெறிப் பாடசாலை” என்னும் இத்திட்டத்தின்கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நடைபெற்றது.

இதற்கமைய, 40 இலட்சம் ரூபாய் செலவில் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் அறநெறிப் பாடசாலைக் கட்டடத்துக்கான அடிக்கல், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நேற்றுக் காலை நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .