2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்பியவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 16 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக ஆட்களை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை (15) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

48 வயதுடைய இந்தச் சந்தேக நபர் ஏறாவூர் நகரில் நடமாடுவதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து இவரைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு, கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த இவர், மீன் வியாபாரி போன்றும் சாரதி போன்றும் தன்னை வெளிப்படுத்தி வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தச் சந்தேக நபர் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X