Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 13 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
அவசர, அவசரமாக அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன், இதில் மூன்று விடயங்கள் முக்கியமாக முன்வைக்கப்படவுள்ளன என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தல், ஜனாதிபதி முறைமை மாற்றம், தேர்தல் மாற்றம் ஆகியனவே அந்த மூன்று விடயங்களுமாகும் எனவும் அவர் கூறினார்.
கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அ.இ.ம.கா கட்சியின் வட்டாரக் கிளை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல், ஓட்டமாவடி பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (12) இரவு நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த அரசமைப்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் என்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என்பதுடன், இணைக்கப்படாது என்ற விடயமே இடம்பெறுகின்றது என்பது நான் அறிந்த வகையில் உள்ளது.
'அதிக விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால், இறுதியில் அரசாங்கம் எதை வழங்கும் என்று கூற முடியாது' என்றார்.
'கடந்த காலத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாரிய பிழைகளை செய்துள்ளார்கள். இந்நிலையில், பெரும்பான்மையின மக்களிடையே எம்மைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களை வளர்க்கத் தவறியுள்ளனர்.
'மேலும், எமது எதிர்பார்ப்பு, கலாசாரம் பற்றிப் பேசியிருந்தால், பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புகள் உருவாகியிருக்காது. இனிமேலும், பிழைகளை விடாமல் செயற்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
24 May 2025
24 May 2025