Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவருகின்ற பலத்த மழை காரணமாக நாளுக்கு நாள் மக்கள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து கொண்டு வருகின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனுடன் மாவட்டச் செயலாளர் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்கள் உட்பட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் உணவுப் பொருட்களையும் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யும் முகமாக, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடி, அவர்களுடைய உதவிகளையும் பெற்று, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நாவட்குடா கிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முகாமுக்கு சமைத்த உணவு, ஏனைய வளங்களும் ஏழு நாள்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அதேபோன்று ஆரயம்பதி கிழக்குப் பிரிவுக்கு உட்பட்ட அல்மனார் பாடசாலையிலும் தங்க வைக்கபட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளும் வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago