2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல் 

கிழக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்காக 1,134 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது. இவ்வெற்றிடங்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கல்வியியல்  பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பப்படவுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தொலைபேசி மூலம் திங்கட்கிழமை (24) தன்னுடன் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாகாணத்திலுள்ள மேற்படி பாடங்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்குப் பணித்துள்ளதுடன், இதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.  

இந்நிலையில், மேற்படி 03 பாடங்களுக்கும் காணப்படும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X