Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் - அதிபர்களுக்கிடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, அச்சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில், நாளை மறுநாள் (24) காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு, விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளார்.
ஆர்வமுடைய சகல அதிபர்களும் ஆசியர்களும், இக்கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இக்கருத்தரங்கில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள், கல்வியமைச்சால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள், ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆசிரியர் - அதிபர் பதவி உயர்வுகளும் சம்பள நிலுவைகளும் போன்ற பல்வேறு விடயங்கள் எடுத்தாளப்படவுள்ளன.
மேலும், இக் கருத்தரங்கில் பங்குபற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைத்துப் பயனாளிகளுக்கும், 29 பக்கங்களைக் கொண்ட சம்பள முரண்பாடு தொடர்பான கையேடும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
36 minute ago
37 minute ago