Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
வ.துசாந்தன் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளை, ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை, எதிர்வரும் ஒக்டோர் 01ம் திகதி நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டு, பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு அனுமதி அட்டை கிடைக்கப்பெறவில்லை என, மட்டக்களப்பு மாவட்ட உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் தலைவர் க.திருமாறன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிழக்கு மாகாணத்தில், 500க்கு மேற்பட்ட உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் உள்ள நிலையில், அனுமதி அட்டை கிடைக்கப்பெறாமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்பட்டதாரிகளுக்கு அனுமதி அட்டை அனுப்புவதில்லை என்ற தகவலும் வெளிவருகின்றன.
ஊவா மாகாணத்தில் ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானியில் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளை விண்ணப்பிக்க கோரியுள்ளார்கள்.
கிழக்கு மாகணத்தில் கோரிய ஆசிரியர் விண்ணப்பத்தில் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளை முதல் பக்கத்தில் நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வர்த்தமானியில் கோரியுள்ளார்கள்.
மேலும் கடந்த காலம் தொட்டு இன்று வரை பட்டதாரிகளை அங்கீகரித்து அரசாங்க திணைக்களத்தில் தொழில்களை வழங்கி உள்ளார்கள். பதவி உயர்வுகளும் கிடைத்து உள்ளன.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் இந்த முடிவு எடுப்பதற்கு காரணம் என்ன? பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினாலும் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், எமக்கான அனுமதி அட்டையினை வழங்காமை வேதனையளிக்கின்றது. எமக்கான அனுமதி அட்டையினை வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண சபைக்கு கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும், உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் பிரைச்சனையை ,முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு, ஒன்றிணைந்த பட்டதாரிகளின் சங்கம், கிழக்கு மாகாண பட்டதாரிகளின் சங்கம், உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா தொழிற்சங்கம் கிழக்கு மாகாணசபை, மத்திய அரசு போன்றவற்றை வேண்டி நிற்கின்றோம். என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .